கேரளக்கஞ்சாவுடன் இருவர் கைது

இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் கைது

by Bella Dalima 05-04-2018 | 5:26 PM
Colombo (News 1st) இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் வேனொன்றில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களிடமிருந்து 220 கிலோ கிராம் நிறையுடைய கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இன்று பிற்பகல் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.