சவுதியில் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் 18 ஆம் திகதி முதல் திரையரங்குகள்  திறப்பு

சவுதியில் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் 18 ஆம் திகதி முதல் திரையரங்குகள்  திறப்பு

சவுதியில் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் 18 ஆம் திகதி முதல் திரையரங்குகள்  திறப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2018 | 12:12 pm

COLOMBO (News 1st) – சவுதி அரேபியா 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மத கட்டுப்பாடுகள் மீறப்படுவதாக கூறி கடந்த 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சினிமாவுக்கு சவுதி அரசு தடை விதித்தது.

எனினும், தற்போது சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதைத்தொடர்ந்து சுமார் 35 வருடங்களின் பின்னர் முதன் முறையாக அந்த நாட்டில் சினிமாவுக்கும் அனுமதி வழங்க சவுதி அரசு தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்