கொய்யாப்பழம் பறிக்கச்சென்ற சிறுமி மீது தாக்குதல்

கொய்யாப்பழம் பறிக்கச்சென்ற சிறுமி மீது தாக்குதல்

கொய்யாப்பழம் பறிக்கச்சென்ற சிறுமி மீது தாக்குதல்

எழுத்தாளர் Bella Dalima

05 Apr, 2018 | 7:10 pm

Colombo (News 1st)

வீடொன்றினுள் கொய்யாப்பழம் பறிக்கச்சென்ற சிறுமி வீட்டின் உரிமையாளரால் தாக்கப்பட்ட நிலையில், நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

நேற்று (04) மாலை பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில், கொய்யாப்பழம் பறிப்பதற்கு முற்பட்ட சிறுமியை உரிமையாளர் தாக்கியதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

நாவலப்பிட்டி – பஹலகொடகோயா அல் அர்வா முஸ்லிம் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 11 வயதான ஷானிகா ஹஜ்ரா எனும் சிறுமியே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டி பொலிஸார் இன்று குறித்த வீட்டு உரிமையாளரை விசாரிக்கு சென்றிருந்த போது, அவர் தனிப்பட்ட பணி நிமித்தம் கொழும்பிற்கு சென்றிருந்ததாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்