by Staff Writer 05-04-2018 | 11:27 AM
COLOMBO (News 1st) - எமது நாட்டு பொருட்களின் தரம் தொடர்பில் சீனாவின் கருத்து அடிப்படையற்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இரும்பு மற்றும் அலுமினியம் உற்பத்தி பொருட்கள் மீது முறையே 25 வீத 15 வீத தீர்வை வரியினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் விதித்தார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக ட்ரம்ப் மேலும் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் உலக வர்த்தக அமைப்பு கவனம் செலுத்த வேண்டுமென சீனா,வேண்டுகோள் விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.