நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று ஆரம்பம்

by Staff Writer 04-04-2018 | 6:57 AM
COLOMBO (News 1st) - பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இன்று காலை 9.30 க்கு ஆரம்பமாகவுள்ள விவதாம் இரவு 9.30 வரை நடைபெறவுள்ளது. விவாதத்தினை தொடர்ந்து இரவு 9.30 க்கு வாக்களிப்பு நடைபெறவுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் தலைமையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த 16 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஸ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் சபநாயகர் கருஜயசூரியவிடம் சமர்பிக்கப்பட்டது. இதற்கு 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டிருந்தனர். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சரான ஜி.பி. ஏக்கநாயக்க , நிஷாந்த முத்துஹெட்டிகம மற்றும் காதர் மஸ்தான் ஆகியோர் இந்த நம்பிக்கையில்லாப் பேரணையில் கையொப்பமிட்டுள்ளனர். பிரதமருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுக்கள் அடுப்படையில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த குற்றச்சாட்டுக்கள் பின்வருமாறு:-
  • நிதி அமைச்சின் கீழ் இயங்கிய மத்திய வங்கியை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தமை.
  • இலங்கை பிரஜாவுரிமையற்ற அர்ஜூன மகேந்திரனை இலங்கை மத்திய வங்கின் ஆளுனராக பரிந்துரை செய்தமை,
  • மத்திய வங்கி பிணைமுறி மோசடியோடு தொடர்புப்பட்டமை.
  • பிட்டிப்பணை ஆணைக்குழுவை நியமித்து பிணைமுறி மோசடியோடு தொடர்புப்பட்ட நபர்களை காப்பற்ற முயன்றமை,
  • பிணைமுறியோடு தொடர்புப்பட்ட நபர்களை காப்பாற்றிமை மற்றும் உண்மைகளை மறைத்து 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியமை,
  • கோப் குழு உறுப்பினருக்கு அச்சுருத்தல் விடுத்தமை,
  • பிணைமுறி மோசடியோடு தொடர்புடையவர் என கருத்தப்பட்ட மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் பி.சமரசிரியை நிதி அமைச்சின் ஆலோசகராக நியமிக்க அமைச்சரவைக்கு பரிந்துரை செய்தமை,
  • அர்ஜுன் மகேந்திரன் மத்திய வங்கி ஆளுனர் பதவியை இழந்த பின் அவரை தனது அமைச்சின் ஆலோசகராக நியமித்தமை .
  • அர்ஜுன் மகேந்திரனை நீதிமன்றில் ஆஜராகாமல் அவர் வௌிநாடு செல்ல அனுமதி வழங்கியமை,
  • நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி கட்டுப்பாடு ​தொடர்பிலுள்ள முக்கிய சட்டங்களை மீறியமை,
  • பொருளாதார முகாமைத்துவ குழுவினூடாக நடைமுறைப்படுத்திய திட்டங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியமை,
  • சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் பதவியை வகித்திருந்தும் கண்டியில் அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமை.