by Staff Writer 04-04-2018 | 11:21 AM
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாக்களிக்கப் போவதில்லை என தீர்மானித்துள்ளதாக ஏ.எச்.எம் பௌசி கூறிய விடயத்தை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நிராகரித்துள்ளார்.
மேலும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவளை நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும் மஹிந்த அமரவீரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 30 பேர் கலந்துகொண்டதாக டிலான் பெரேரா கூறியுள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பது தொடர்பிலேயே அதிகளவில் பேசப்பட்டதாக டிலான் பெரேரா மேலும் குறிப்பிட்டார்.
மேலும் இந்த கலந்துரையாடலில் ஏ.எச்.எம்.பௌசி கலந்துகொள்ளவில்லை எனவும் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்