வவுணதீவு,போரதீவுப்பற்று பிரதேசசபைகளும் ததேகூ வசம்

வவுணதீவு, போரதீவுப்பற்று பிரதேச சபைகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமாகின

by Bella Dalima 03-04-2018 | 7:06 PM
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு - மண்முனை மேற்கு பிரதேச சபையின் ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற செல்லத்தம்பி சண்முகநாதன் பிரதேச சபையின் தலைவராகவும், பொன்னம்பலம் செல்லத்துரை பிரதித் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டனர். தலைவர் பதவிக்கான வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்லத்தம்பி சண்முகநாதன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கிறிஸ்டிராஜ் ஆகியோர் போட்டியிட்டனர். செல்லத்தம்பி சண்முகநாதனுக்கு ஆதரவாக 10 வாக்குகளும் கிறிஸ்டி ராஜிற்கு ஆதரவாக 4 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் போது நடுநிலை வகித்தனர். இதேவேளை, மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச சபையின் ஆட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமானது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற யோகநாதன் ரஜனி தலைவராகவும் நாராயணப்பிள்ளை தர்மலிங்கம் பிரதித் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டனர். போரதீவுப்பற்று பிரதேச சபையின் முதல் அமர்வு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம். சலீம் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது.

ஏனைய செய்திகள்