பொதுநலவாய விளையாட்டு விழா நாளை ஆரம்பம்

பொதுநலவாய விளையாட்டு விழா நாளை ஆரம்பம்: 139 பேர் கொண்ட இலங்கை அணி அவுஸ்திரேலியா சென்றுள்ளது

by Bella Dalima 03-04-2018 | 9:18 PM
Colombo (News 1st)  21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா அவுஸ்திரேலியாவின் Gold Coast நகரில் நாளை (04) ஆரம்பமாகவுள்ளது. இந்த விளையாட்டு விழா எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வீர, வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கலாக 139 பேர் கொண்ட இலங்கை அணி அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளது. தெற்காசியாவின் அதிவேக வீராங்கனையான ருமேஷிகா ரத்நாயக்க, உயரம் தாண்டும் வீரரான மஞ்சுள குமார, ஈட்டி எறியும் வீரரான சம்பத் ரணசிங்க உட்பட 13 மெய்வல்லுநர்கள் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளனர். பட்மிண்டன், பளுதூக்கல், மேசைப்பந்து, குத்துச்சண்டை, சைக்கிள், ஜிம்னாஸ்டிக் உட்பட 15 வகையான போட்டிப் பிரிவுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வீர, வீராங்கனைகள் போட்டியிடவுள்ளனர். இதேவேளை, அவுஸ்திரேலியாவின் Gold Coast நகரை சென்றடைந்துள்ள வீர, வீராங்கனைகளின் நலனை அறிவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர விளையாட்டுக் கிராமத்திற்கு விஜயம் செய்தார்.