பரபரப்பான சூழலில் கூடிய அமைச்சரவை

பரபரப்பான சூழலில் கூடிய அமைச்சரவை: இடைநடுவே சில அமைச்சர்கள் வௌியேறினர்

by Staff Writer 03-04-2018 | 11:52 AM
COLOMBO (News 1st) - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் சிலர், தற்போது அங்கிருந்து வௌியேறியுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார். பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையை அடுத்தே அமைச்சரவை கூட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வௌியேறிச் சென்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் மேலும் மூன்று முக்கிய கலந்துரையாடல்கள் இன்று இடம்பெறவுள்ளன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடி, பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பிற்பகல் தனித்தனியாக கூடி நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளனர். https://www.youtube.com/watch?v=pwDl2ZZOEzA