ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி மகஜர் கையளிப்பு

ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி மகஜர் கையளிப்பு

ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி மகஜர் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2018 | 7:45 pm

COLOMBO (News 1st) – ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி, கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் கையெழுத்துத்திட்ட மகஜரொன்று கையளிக்கப்பட்டது.

ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் இருவரும் கல்வி பயிலும் கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள், அதிபர், பிரதிஅதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இன்று காலை மகஜரில் கையொப்பமிட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதன்போது 2500 இற்கும் மேற்பட்ட கையொப்பங்கள் திரட்டப்பட்டுள்ளன.

பாடசாலை அதிபரின் தலைமையில் கையொப்பம் பெறப்பட்ட மகஜர் இன்று இலங்கை தமிழ் ஆசிரியர் சங்க செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

இதேவேளை இன்று நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்