by Staff Writer 02-04-2018 | 8:29 PM
COLOMBO (News 1st) - கல்முனை மாநகர சபையின் ஆட்சி ஐக்கிய தேசியக் கட்சி வசமானது.
தேர்தலில் 9 ஆசனங்களை பெற்ற சுசேட்சைக் குழு நான்கின் ஒரு உறுப்பினரேனும் மேயர் தெரிவிற்கான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கல்முனை மாநகர சபைக்கு மேயரை தெரிவு செய்ய பகிரங்க வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஏ.எம் ரக்கீப்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் குலசேகரம் மகேந்திரனும் மேயர் பதவிக்காக போட்டியிட்டனர்.
ஏ.எம் ரக்கீப்புக்கு ஆதரவாக 22 வாக்குகள் கிடைத்ததுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, சுயேட்சை குழுக்கள், நல்லாட்சிக்கான தேசிய மக்கள் முன்னணி ஆகியன ஆதரவாக வாக்களித்தன.
எதிர்த்து போட்டியிட்ட குலசேகரம் மகேந்திரனுக்கு 7 வாக்குகளே கிடைத்தன.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் 15 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட காத்தமுத்து கணேஷ் பிரதிமேயராக தெரிவுசெய்யப்பட்டார்.
தேர்தலில் 9 ஆசனங்களை பெற்ற சுசேட்சைக் குழு நான்கின் ஒரு உறுப்பினரேனும் மேயர் தெரிவுக்கான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.