வலிகாமம் வடக்கு, நாவிதன்வௌி பிரதேச சபைகள் த.தே.கூ வசமானது

வலிகாமம் வடக்கு, நாவிதன்வௌி பிரதேச சபைகள் த.தே.கூ வசமானது

வலிகாமம் வடக்கு, நாவிதன்வௌி பிரதேச சபைகள் த.தே.கூ வசமானது

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2018 | 5:09 pm

COLOMBO (News 1st) – யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபை மற்றும் நாவிதன்வௌி பிரதேச சபைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமானது.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காலை இடம்பெற்றது.

வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சோமசுந்தரம் சுகிர்தனுக்கு ஆதரவாக 30 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 7 உறுப்பினர்கள் சுகிர்தனுக்கு ஆதரவளித்துள்ளனர்.

இந்த வாக்கெடுப்பில் தமிழர் விடுதலை கூட்டணியின் 2 உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.

இதேவேளை நாவிதன்வௌி பிரதேச சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

நாவிதன்வௌி பிரதேச சபையின் தவிசாளராக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளா​ர்.

இன்று காலை இடம்பெற்ற திறந்த வாக்கெடுப்பில் தவராசா கலையரசனுக்கு 8 வாக்குகள் கிடைத்துள்ளன.

உதவி தவிசாளராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அப்துல் குத்தூஸ் அப்துல் சமத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வாக்கெடுப்பில் சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவர் வாக்களிக்கவில்லை என பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் மதுர விதானகே 23 வாக்குகளை பெற்று, ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்