கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் அடையாள உண்ணாவிரதம்

கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் அடையாள உண்ணாவிரதம்

கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் அடையாள உண்ணாவிரதம்

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2018 | 7:56 pm

கிழக்கு பல்கலைகழக கல்விசாரா ஊழியர்கள் சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வாளாகத்தின் முன்பாக இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகம், இசை நடனக்கல்லூரி, மருத்துவ பீடம், ஆகியவற்றில் கடமையாற்றும் கல்வி சாரா ஊழியர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை யாழ். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

கடந்த 34 நாட்களுக்கும் மேலாக பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்ற போதிலும் இதுவரையில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்து கல்விசாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கொடும்பாவி எரித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்