அமைச்சர்கள் சிலரை நீக்குவதற்கு பிரதமர் ஆலோசனை – மைத்திரி குணரட்ன

அமைச்சர்கள் சிலரை நீக்குவதற்கு பிரதமர் ஆலோசனை – மைத்திரி குணரட்ன

அமைச்சர்கள் சிலரை நீக்குவதற்கு பிரதமர் ஆலோசனை – மைத்திரி குணரட்ன

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2018 | 3:46 pm

COLOMBO (News 1st) – ஜோன் அமரதுங்க மற்றும் காமினி ஜயவிக்ரம பெரேரா ஆகியோரை அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்குவது தொடர்பில் நேற்றிரவு அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது ஆராயப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர் மைத்திரி குணரட்ன தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் தொடர்பிலும் இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் மைத்திரி குணரட்ன தெரிவித்துள்ளார்.

மக்கள் இந்த மாற்றங்களை கோரவில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்கவையே மாற்றக் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்