நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் சந்திரிக்கா

நம்பிக்கையில்லாப் பிரேரணையின் முடிவு அரசாங்கத்தை பாதிக்காது - சந்திரிக்கா

by Staff Writer 01-04-2018 | 8:04 PM
COLOMBO (News 1st) - பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் முடிவு அரசாங்கத்தை பாதிக்காது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறினார். நல்லிணக்க அதிகாரிகளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாராநாயக்க குமாரதுங்க யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினார். இதேவேளை, மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் முன்னாள் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடினார்.
கேள்வி - நான்காம் திகதி கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கூறுங்கள். பதில் - சந்திரிக்கா அது தொடர்பில் எனக்கு தெரியாது. கேள்வி - நம்பிக்கையில்லா பிரேரணை தோற்றாலும், இல்லாவிட்டாலும் அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியுமா? பதில் -சந்திரிக்கா ஆம். அதில் பிரதமர் மாத்திரம் தானே? https://www.facebook.com/265986223570334/videos/938992696269680/