மேலும் சில மருந்துகளின் விலைகளை குறைக்க தீர்மானம்

மேலும் சில மருந்துகளின் விலைகளை குறைக்க தீர்மானம்

மேலும் சில மருந்துகளின் விலைகளை குறைக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

01 Apr, 2018 | 4:09 pm

COLOMBO (News 1st) – எதிர்வரும் மாதங்களில் மேலும் சில மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதிக விலையுடைய மருந்துகள் மற்றும் புற்றுநோய்க்கான மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

சார்க் நாடுகளின் தொற்றா நோய்கள் தொடர்பான முதலாவது வருடாந்த மாநாட்டிற்கு இணையாக கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

இதுவரை 48 மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இருதய நோயாளிகளுக்கான ஸ்டென்ஸ், இலவசமாக வழங்கப்படுவதால், இருதய நோயாளிக்கான சத்திரசிகிச்சைகள் தாமதமின்றி இடம்பெறுவதாக சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போது ஒரு மாதத்திற்குள் சுமார் 500 சத்திரசிகிச்சைகள் இடம்பெறுவதாக ஊடக சந்திப்பில் அமைச்சர் தெரிவித்தார்.

சார்க் நாடுகளின் தொற்றா நோய்கள் தொடர்பான முதலாவது வருடாந்த மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய கொள்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த மாநாடு இன்றும் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்