சாவகச்சேரி பிரதேச சபையை கைப்பற்றியது தமிழ் தேசியக் கூட்டமைப்பு

சாவகச்சேரி பிரதேச சபையை கைப்பற்றியது தமிழ் தேசியக் கூட்டமைப்பு

சாவகச்சேரி பிரதேச சபையை கைப்பற்றியது தமிழ் தேசியக் கூட்டமைப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2018 | 12:53 pm

COLOMBO (News 1st) – சாவகச்சேரி பிரதேச சபையின் ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று காலை நடைபெற்ற வாக்கெடுப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கந்தையா வாமதேவன் மேலதிக வாக்குகளைப் பெற்று தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் க.சதீஸ்வரன் 6 வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொண்டார்.

சாவகச்சேரி பிரதேச சபையின் உப தலைவராக செ.மயூரன் போட்டியின்றி தெரிவாகியுள்ளார்.