அண்டார்ட்டிக்காவில் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவு பனிப்பொழிவு

அண்டார்ட்டிக்காவில் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவு பனிப்பொழிவு

அண்டார்ட்டிக்காவில் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவு பனிப்பொழிவு

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2018 | 11:20 am

COLOMBO (News 1st)  அண்டார்ட்டிக்காவில் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவு பனிப்பொழிவு காணப்படுவதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

1801-1810 ஆகிய பத்தாண்டுகளில் பெய்த பனிப்பொழிவை விட, 2001- 2010 ஆகிய பத்தாண்டுகளில் பெய்த பனிப்பொழிவின் அளவு 27200 கோடி டன்னாக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பருவநிலையில் வெப்பம் அதிகரிப்பதால் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அதிகரித்த பனிப்பொழிவு காரணமாக உலக அளவில் கட்டமட்டத்தின் அதிகரிப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.