by Bella Dalima 31-03-2018 | 3:44 PM
Colombo (News 1st)
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றுவதற்கு முயற்சிப்பதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முழுமையான தீர்வுகள் கிடைக்கவில்லை என அமைச்சர் கபீர் ஹாசிம் குறப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் நேற்று முன்தினம் (29) பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அமைச்சர் கூறினார்.
32 ஆவது நாளாகத் தொடரும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் பல்கலைக்கழக செயற்பாடுகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மாதாந்த நிலுவை கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வி சாரா ஊழியர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
2016 ஆம் ஆண்டில் உடன்பாடு காணப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துமாறு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள கல்வி சாரா ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.