இரண்டாம் உலகப்போரின் போது  மூழ்கிய கப்பல் மீட்பு

இரண்டாம் உலகப் போரின் போது திருகோணமலை துறைமுகத்தில் குண்டுத்தாக்குதலால் மூழ்கிய கப்பல் மீட்பு

by Bella Dalima 31-03-2018 | 4:31 PM
Colombo (News 1st)  இரண்டாம் உலகப் போரின் போது திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த நிலையில், குண்டுத்தாக்குதலில் நிர்மூலமான கப்பல் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஜப்பான் விமானம் மேற்கொண்ட குண்டுத்தாக்குதலில் இந்த கப்பல் கடலில் மூழ்கியது. 138 மீட்டர் நீளமுடைய குறித்த கப்பல், பயணிகள் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கப்பலை மீட்பதற்கு கடந்த 5 மாதங்களாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். சகயின் எனப்படும் இந்த கப்பல் மூழ்கி 75 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.