அரிசி இறக்குமதிக்கான வரிச்சலுகை நீடிப்பு

அரிசி இறக்குமதிக்கான வரிச்சலுகை நீடிப்பு

by Bella Dalima 31-03-2018 | 4:55 PM
Colombo (News 1st)  அரிசி இறக்குமதிக்கான வரிச்சலுகையை ஒரு மாதத்தால் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், இம்மாதம் இறுதி வரை அரிசிக்கான வரிச்சலுகை அமுலில் இருக்கும் என வாழ்க்கைச் செலவுக்குழு தெரிவித்துள்ளது. பண்டிகைக்காலத்தில் அரிசிக்கான விலை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வாழ்க்கைச் செலவுக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, உருளைக்கிழங்கு மீது விதிக்கப்பட்டுள்ள வர்த்தக வரியை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிப்பதற்கு வாழ்க்கைச் செலவுக்குழு தீர்மானித்துள்ளது. ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு மீது விதிக்கப்பட்ட 30 ரூபா வர்த்தக வரி இன்றுடன் நீக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. எனினும், விவசாயிகளின் நலன் கருதி வர்த்தக வரியை மேலும் 2 மாதங்களுக்கு அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக வாழ்க்கைச் செலவுக்குழு தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம், உருளைக்கிழங்கு மீதான வர்த்தக வரி எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.