மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை: டேவிட் வார்னர்

மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை: டேவிட் வார்னர்

மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை: டேவிட் வார்னர்

எழுத்தாளர் Bella Dalima

31 Mar, 2018 | 4:11 pm

அவுஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்தி மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

சிட்னியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் டேவிட் வார்னர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பந்தை சேதப்படுத்திய பேன்கிராஃப்ட்டுக்கு 9 மாத தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்ணீர்மல்க இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த வார்னர், அனைவரிடமும் மன்னிப்புக் கோரியுள்ளார்.

இவ்வாறான செயல்கள் எதிர்காலத்தில் ஒருபோதும் இடம்பெறாது என உறுதி அளிப்பதாகவும் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்