கொழும்பில் பிரம்மாண்டமாக நடைபெற்ற UNLEASHED இசை நிகழ்ச்சி

கொழும்பில் பிரம்மாண்டமாக நடைபெற்ற UNLEASHED இசை நிகழ்ச்சி

கொழும்பில் பிரம்மாண்டமாக நடைபெற்ற UNLEASHED இசை நிகழ்ச்சி

எழுத்தாளர் Bella Dalima

31 Mar, 2018 | 7:46 pm

UNLEASHED இசை நிகழ்ச்சி நேற்று (30) கொழும்பில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்திய திரைப்படத்துறையின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு, UNLEASHED இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

CR & FC விளையாட்டரங்கில் இந்த நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது.

இந்த இசை நிகழ்ச்சியில், இந்திய இசைக்கலைஞர்களான சித் ஸ்ரீராம், ஆண்ட்ரியா ஜெரமியா, சத்தியபிரகாஷ், நிகித்தா காந்தி, அபே ஜோட் புர்ஹர், அனில் ஸ்ரீநிவாசன் மற்றும் லியோன் ஜேம்ஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த இசை நிகழ்ச்சியில் பெருந்திரளான இலங்கை ரசிகர்கள் பங்கேற்றிருந்தனர்.

UNLEASHED இசை நிகழ்ச்சிக்கு எம்.டி.வி. / எம்.பி.சி ஊடக அனுசரணை வழங்கியிருந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்