உஷ்ணமான வானிலை ஏப்ரல் மாதம் இறுதி வரை நீடிக்கும்

உஷ்ணமான வானிலை ஏப்ரல் மாதம் இறுதி வரை நீடிக்கும்

உஷ்ணமான வானிலை ஏப்ரல் மாதம் இறுதி வரை நீடிக்கும்

எழுத்தாளர் Bella Dalima

31 Mar, 2018 | 3:54 pm

Colombo (News 1st) 

நிலவும் உஷ்ணமான வானிலை ஏப்ரல் மாதம் இறுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

காற்றின் வேகம் குறைவடைந்தமை உள்ளிட்ட பல காரணிகளால் வெப்பமான வானிலை அதிகரித்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் வெப்பத்தின் அளவு 1 முதல் 3 செல்சியஸ் வரை அதிகரித்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (30) அநுராதபுரத்தில் அதிக வெப்பம் நிலவியதுடன், 36.2 பாகை செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்