இரண்டாம் உலகப் போரின் போது திருகோணமலை துறைமுகத்தில் குண்டுத்தாக்குதலால் மூழ்கிய கப்பல் மீட்பு

இரண்டாம் உலகப் போரின் போது திருகோணமலை துறைமுகத்தில் குண்டுத்தாக்குதலால் மூழ்கிய கப்பல் மீட்பு

இரண்டாம் உலகப் போரின் போது திருகோணமலை துறைமுகத்தில் குண்டுத்தாக்குதலால் மூழ்கிய கப்பல் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

31 Mar, 2018 | 4:31 pm

Colombo (News 1st) 

இரண்டாம் உலகப் போரின் போது திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த நிலையில், குண்டுத்தாக்குதலில் நிர்மூலமான கப்பல் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஜப்பான் விமானம் மேற்கொண்ட குண்டுத்தாக்குதலில் இந்த கப்பல் கடலில் மூழ்கியது.

138 மீட்டர் நீளமுடைய குறித்த கப்பல், பயணிகள் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

கப்பலை மீட்பதற்கு கடந்த 5 மாதங்களாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

சகயின் எனப்படும் இந்த கப்பல் மூழ்கி 75 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்