பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் இயலுமை இல்லை

நம்பிக்கையில்லா பிரேரணையிலுள்ள விடயங்களுக்கு எதிராக வாக்களிக்கும் இயலுமை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு இல்லை - லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

by Bella Dalima 30-03-2018 | 3:05 PM
நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி, பிரதமரை நேற்று (29) சந்தித்து தெரிவித்ததாக வௌியாகிய தகவல் பொய்யானது என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றி பெற செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டுள்ள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, எதிர்வரும் 2 ஆம் திகதி ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்தார். எதிர்வரும் 4 ஆம் திகதி நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படும் பட்சத்தில், அதன் பின்னர் நல்லிணக்க அரசாங்கம் தொடராது எனவும் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார். நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக அல்லாமல் வேறு ஏதேனுமொரு தீர்மானத்தை எடுக்கும் இயலுமை தமக்கு இல்லை எனவும் அது இறையாண்மைக்கு பொருந்தாது எனவும் லக்ஷ்மன் யாப்பா மேலும் தெரிவித்தார்.