பேராதனை போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக வயிற்றிலுள்ள சிசுவுக்கு சத்திரசிகிச்சை

பேராதனை போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக வயிற்றிலுள்ள சிசுவுக்கு சத்திரசிகிச்சை

பேராதனை போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக வயிற்றிலுள்ள சிசுவுக்கு சத்திரசிகிச்சை

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2018 | 4:21 pm

Colombo (News 1st) 

பேராதனை போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக இடம்பெற்ற விசேட சத்திரசிகிச்சையொன்று வெற்றியளித்துள்ளது.

கர்ப்பிணி தாயொருவரின் வயிற்றிலுள்ள சிசுவின் தொண்டைப்பகுதியில் இருந்த கட்டியை வைத்தியர்கள் சத்திரசிகிச்சை மேற்கொண்டு 4 மணித்தியாலங்களில் அகற்றியுள்ளனர்.

சிசு பிறந்த பின்னர், சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் பட்சத்தில், அது குழந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே தற்போது அந்த சத்திரசிகிச்சையை மேற்கொண்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

பேராதனை மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகிய வைத்தியசாலைகளின் விசேட வைத்தியர்கள் குழு இந்த சத்திரசிகிச்சையை மேற்கொண்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்