பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20: இலங்கை வெற்றி

பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20: இலங்கை வெற்றி

பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20: இலங்கை வெற்றி

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2018 | 4:44 pm

Colombo (News1 st) 

பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியை இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்களால் வெற்றிகொண்டது.

இதற்கமைய, 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலை வகிக்கின்றன.

கொழும்பு NCC மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது.

7 வீராங்கனைகள் 10 க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அணித்தலைவி பிஸ்மா மஹ்ருப் அதிகபட்சமாக 20 ஓட்டங்களைப் பெற்றார்.

பாகிஸ்தான் மகளிர் அணி 18. 4 ஓவர்களில் 72 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

பந்து வீச்சில் சஷிகலா சிறிவர்தன 3.4 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

வெற்றி இலக்கான 73 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை மகளிர் அணி சார்பாக அனுஸ்கா சஞ்சீவனி 20 ஓட்டங்களையும் , ரெபேகா வென்டோட் 19 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று வெற்றியை உறுதி செய்தனர்.

இலங்கை மகளிர் அணி 14.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கைக் கடந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்