சித்திரைப் புத்தாண்டின் பின்னர் ரயில் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிப்பு

சித்திரைப் புத்தாண்டின் பின்னர் ரயில் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிப்பு

சித்திரைப் புத்தாண்டின் பின்னர் ரயில் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2018 | 5:06 pm

Colombo (News 1st)

சித்திரைப் புத்தாண்டின் பின்னர் ரயில் கட்டணத்தை 15 வீதத்தினால் அதிகரிக்கவுள்தாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே வணிக அத்தியட்சகர் என்.ஜே. இதிபொலகே குறிப்பிட்டார்.

2008 ஆம் ஆண்டு கட்டணத் திருத்தத்தின் அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைய, இந்த ரயில் கட்டண அதிகரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது குறைந்த கட்டணங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.

முன்பதிவிற்கான கட்டணத்தில் மாற்றம் ஏற்படுமென ரயில்வே வணிக அத்தியட்சகர் என்.ஜே. இதிபொலகே குறிப்பிட்டார்.

இது தொடர்பிலான இறுதி அறிக்கையை பொது முகாமையாளரிடம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கவுள்ளதாக ரயில்வே வணிக அத்தியட்சகர் தெரிவித்தார்.

ரயில் கட்டணத் திருத்தம் தொடர்பில் நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழுவின் தீர்மானத்திற்கமைய, ரயில் கட்டணத்தில் மாற்றம் ஏற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்