காங்கேசன்துறை துறைமுகம் புனரமைக்கப்படவுள்ளது

காங்கேசன்துறை துறைமுகம் புனரமைக்கப்படவுள்ளது

காங்கேசன்துறை துறைமுகம் புனரமைக்கப்படவுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2018 | 3:53 pm

Colombo (News 1st) 

அரசாங்கத்தின் அபிவிருத்தி கொள்கைக் கட்டமைப்பிற்கு அமைவாக வடக்கு, கிழக்கை பொருளாதார நுழைவாயில் வலயமாக அபிவிருத்தி செய்யும் பிரதான திட்டங்களில் ஒன்றாக காங்கேசன்துறை துறைமுகம் புனரமைக்கப்படவுள்ளது.

இதற்கமைவாக, இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள நிதியைப் பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தைப் புனரமைத்தல் மற்றும் புதிய இறங்குதுறையொன்றை நிர்மாணித்தல் ஆகிய பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய இறங்குதுறையின் பணிகளை இலங்கை துறைமுக அதிகார சபையினால் மேற்கொள்வதற்கும் இதற்கு தேவையான கொள்முதல் மற்றும் தொழில்நுட்பங்களை மதிப்பீடு செய்வதற்கான குழுவொன்றை அமைப்பதற்கும் துறைமுகம் மற்றும் கடல் நடவடிக்கைகள் அமைச்சர் சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்