சினேகனுக்கு ஜோடியாகும் ஓவியா?

சினேகனுக்கு ஜோடியாகும் ஓவியா?

சினேகனுக்கு ஜோடியாகும் ஓவியா?

எழுத்தாளர் Bella Dalima

29 Mar, 2018 | 6:29 pm

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக வலம் வந்த சினேகன் – ஓவியா இருவரும் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா, ராகவா லாரன்ஸ் ஜோடியாக ‘காஞ்சனா 3’ படத்தில் நடித்து வருகிறார்.

அனிதா உதீப் இயக்கத்தில் ‘90 எம்.எல்’ என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்திற்கு சிம்பு இசையமைக்கவுள்ளார்.

மேலும் ‘களவாணி-2’ படத்தில் விமல் ஜோடியாகவும் நடிக்கிறார். இந்த நிலையில், பாடல் ஆசிரியரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் பங்கேற்றவருமான சினேகன் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் ஓவியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது.

சினேகன் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்திற்கு ‘பனங்காட்டு நரி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இதில் சினேகன் ஜோடியாக ஓவியாவை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது. எனினும், சினேகன் ஜோடியாகவோ அல்லது முக்கிய கதாபாத்திரத்திலோ ஓவியா நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்