மீண்டும் தாயகம் திரும்பினார் மலாலா

ஆறு வருடங்களின் பின்னர் மீண்டும் தாயகம் திரும்பினார் மலாலா

by Bella Dalima 29-03-2018 | 4:32 PM
பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் பிழைத்து, வெளிநாட்டில் வசித்து வந்த மலாலா 6 வருடங்களின் பின்னர் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார். இங்கிலாந்தில் வசித்து வந்த மலாலா, தனது தாய்நாடான பாகிஸ்தானில் 4 நாட்கள் தங்கியிருப்பார் என தகவல் வௌியாகியுள்ளது. இதன்போது பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாசியை மலாலா சந்திக்கவுள்ளார். பாகிஸ்தானில் 2012 ஆம் ஆண்டில் பாடசாலையிலிருந்து பேருந்து ஒன்றில் மலாலா வீடு திரும்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், தலிபான் தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளானார். பெண்களின் கல்வி உரிமையை வலியுறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீவிரவாதிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உயிர் தப்பிய மலாலா, சிகிச்சைகளுக்காக வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார். பெண்களுக்கு கல்வியை வலியுறுத்தியதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவுக்கு வழங்கப்பட்டது.