பதில் பிரதம நீதியரசராக கே.டீ. சித்ரசிறி

பதில் பிரதம நீதியரசராக கே.டீ. சித்ரசிறி பதவிப்பிரமாணம்

by Staff Writer 29-03-2018 | 7:56 AM
COLOMBO (News 1st) - உயர் நீதிமன்ற நீதிபதி கே.ரி. சித்ரசிறி பதில் பிரதம நீதியரசராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் , ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாண நிகழ்வு |நேற்று நடைபெற்றது. பிரதம நீதியரசர் வௌிநாட்டிற்கு செல்லவுள்ளமையால் பதில் பிரதம நீதியரசராக அவர் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிகள் மோசடி தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக நீதிபதி கே.ரி. சித்ரசிறி செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.