வெனிசுலா சிறையில் தீ விபத்து: 68 கைதிகள் உயிரிழப்பு

வெனிசுலா சிறையில் தீ விபத்து: 68 கைதிகள் உயிரிழப்பு

வெனிசுலா சிறையில் தீ விபத்து: 68 கைதிகள் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

29 Mar, 2018 | 5:20 pm

வெனிசுலா நாட்டில் சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 68 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

சிறையிலிருந்து தப்பிக்க சிலர் தீ வைத்ததாகக் கூறப்பட்டுள்ளது.

வெனிசுலா நாட்டின் வாலன்சியா நகரில் உள்ள சிறையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சிறை முழுவதும் தீ பரவியதில் 68 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர்.

சிறையில் தீப்பிடித்த தகவல் பரவியதையடுத்து, கைதிகளின் உறவினர்கள் சிறை முன்பு திரண்டனர்.

அவர்களை கலவர தடுப்புப் பொலிஸார் தடுக்க முற்பட்டபோது, மோதல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பொதுமக்களை பொலிஸார் விரட்டியடித்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்