மணல் புயல் காரணமாக சீனாவில் கடும் பாதிப்பு

மணல் புயல் காரணமாக சீனாவில் கடும் பாதிப்பு

மணல் புயல் காரணமாக சீனாவில் கடும் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Mar, 2018 | 8:54 am

COLOMBO (News 1st)  – மங்கோலியா நாட்டில் இருந்து சீனாவை தாக்கும் மணற் புயலினால் உருவான காற்று மாசு காரணமாக தலைநகர் பீஜிங் மற்றும் சில மாகாணங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

மங்கோலியாவின் எல்லையோர பகுதியில் உள்ள கோபி பாலைவனப் பகுதியில் இருந்து சீனாவை மணற் புயல் தாக்கும் என சீன வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், நேற்று அதிகாலையில் இருந்து தொடர்ந்து வீசிய மணற் புயலினால் தலைநகர் பீஜிங் உட்பட சுமார் 15 இலட்சம் சதுர கிலோமீட்டர்கள் அளவுக்கு மணல் மற்றும் தூசினால் ஏற்பட்ட மாசு நிறைந்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்