நுவரெலியாவில் மலக்கழிவு கலந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் குடிநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு

நுவரெலியாவில் மலக்கழிவு கலந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் குடிநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு

நுவரெலியாவில் மலக்கழிவு கலந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் குடிநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு

எழுத்தாளர் Staff Writer

29 Mar, 2018 | 11:05 am

COLOMBO (News 1st) – நுவரெலியாவில் மலக்கழிவு கலந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் குடிநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நீர் மாதிரிகள் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீதுருதாலகால மலையடிவாரத்தில் காணப்படும் 8 ஊற்றுக்களிலிருந்து நுவரெலியா நகர எல்லைக்குள் நீர் விநியோகிக்கப்படுகின்றது.

நீர் தாங்கிகளில் சேகரிக்கப்பட்டு குளோரின் சேர்த்து விநியோகிக்கப்படுகின்றது.

எனினும், அண்மைக் காலமாக குடிநீரில் மலக்கழிவு கலந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்