நயன்தாராவிற்கு விரைவில் திருமணம்?

நயன்தாராவிற்கு விரைவில் திருமணம்?

நயன்தாராவிற்கு விரைவில் திருமணம்?

எழுத்தாளர் Staff Writer

29 Mar, 2018 | 12:40 pm

COLOMBO (News 1st) – நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில், இந்த வருட இறுதியில் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக, இருவருக்கும் நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் விவகாரம் பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் இதையே பதிவிட்டவண்ணம் இருக்கிறார்கள். நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இருவரும் காதல் வயப்பட்டதும், பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்துகொண்டது எல்லோரும் அறிந்த விடயம் இருவருக்கும் இரகசியமாக திருமணம் முடிந்துவிட்டது என்றும் கிசுகிசுத்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் நயன்தாரா பேசும்போது, “எனது வருங்கால கணவருக்கு நன்றி” என்று சொன்ன வார்த்தை சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதன்மூலம் விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதை அவர் உறுதிப்படுத்தி இருப்பதாக கூறப்பட்டது.

கேரளாவில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்க இரகசியமாக நிச்சயதார்த்தம் நடத்தியதாக தகவல் கசிந்துள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த பிறகே இருவரும் அமெரிக்காவுக்கு சென்று கேரளா திரும்பி உள்ளனர். அமெரிக்காவில் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் ட்விட்டரில் வெளியிட்டனர்.

மறைந்த ஆந்திர முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாறு படத்திலும் அவரது மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க பேசி வருகின்றனர். அடுத்த சில மாதங்கள் சினிமாவில் ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டு இருப்பார் என்றும், இந்த வருடம் இறுதியில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடக்கும் என்றும் இருவருக்கும் நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்