ஜாலிய விக்ரமசூரிய தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரிப்பு

ஜாலிய விக்ரமசூரிய தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரிப்பு

ஜாலிய விக்ரமசூரிய தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

29 Mar, 2018 | 3:46 pm

Colombo (News 1st) 

அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

தாம் தொடர்ந்தும் இலங்கை தூதுவருக்கான இராஜதந்திர சலுகைகளுக்கு உரித்துடையவர் என உத்தரவிடுமாறு கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

தமக்குரிய சலுகைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து வௌிவிவகார அமைச்சின் செயலாளர், அமெரிக்க வௌிவிவகார அமைச்சுக்கு அனுப்பியுள்ள கடிதத்தை செல்லுபடியற்றதாக்குமாறு மனுதாரரான ஜாலிய விக்ரமசூரிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ​கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தகைய உத்தரவை பிறப்பிப்பதற்கான சட்ட அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இல்லை என இந்த மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி பீ.பத்மன் சூரசேன, நீதிபதி ஷிரான் குணரத்ன ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள வௌிவிவகார அமைச்சின் செயலாளர், வௌிவிவகார அமைச்சர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோருக்கு அறிவித்தல் பிறப்பிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்