அர்ஜூன மகேந்திரனைக் கைது செய்ய சிவப்பு அறிவித்தலைப் பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கை சர்வதேச பொலிஸாரிடம் முன்வைப்பு

எழுத்தாளர் Bella Dalima

29 Mar, 2018 | 3:59 pm

Colombo (News 1st) 

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரனைக் கைது செய்வதற்காக சிவப்பு அறிவித்தலைப் பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையை சர்வதேச பொலிஸாரிடம் முன்வைத்துள்ளதாக முறைப்பாட்டாளர் தரப்பு சட்டத்தரணிகள் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளனர்.

இதேவேளை, அர்ஜுன மகேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளது.

முறிகள் மோசடி தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜர்படுத்தப்பட்ட பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்