சாதாரண பரீட்சை பெறுபேறு இன்று

சாதாரண பரீட்சை பெறுபேறு இன்று வெளியிடப்படவுள்ளது

by Staff Writer 28-03-2018 | 10:59 AM
2017ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று மாலை வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk எனும் இணையத்தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 5116 பரீட்சை நிலையங்களில் 688,573 பரீட்சார்த்திகள் கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இவர்களில் 429,494 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பதுடன், 200,080 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.