அபுதாபி மத்திய சிறையில் உதயங்க தடுத்து வைப்பு

உதயங்க வீரதுங்க அபுதாபியின் மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் 

by Bella Dalima 27-03-2018 | 8:58 PM
ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டு, அபுதாபியின் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் நம்பத்தகுந்த தகவல்கள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளன. ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அதிகாரிகளும் இலங்கை அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் பின்னர் கடந்த சனிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். உதயங்க வீரதுங்கவை நாட்டிற்கு அழைத்து வந்து, சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.