by Bella Dalima 27-03-2018 | 5:09 PM
Colombo (News 1st)
கிளைபோசேட் (Glyphosate) களைக்கொல்லிக்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.