இரகசியமாக சீனா புறப்பட்டுச்சென்ற கிம் ஜாங் உன்

இரகசியமாக சீனாவிற்கு புறப்பட்டுச்சென்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்

by Bella Dalima 27-03-2018 | 4:17 PM
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இரகசியமாக சீனாவிற்கு சென்றிருப்பதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. வட கொரியாவிலிருந்து ரயில் மூலம் சீனாவின் டேங்டாங் என்ற நகருக்கு புறப்பட்டுச் சென்ற கிம் ஜாங் உன், அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் காரில் பெய்ஜிங் நகருக்கு சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் நேரடி சந்திப்பிற்கு வட கொரியா ஒப்புக்கொண்டுள்ள நிலையில், சீனாவுடன் இரகசிய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில், பெய்ஜிங் நகரில் வட கொரிய அதிகாரிகள் வாகனங்களில் அணிவகுத்த காட்சிகள் வெளியாகியுள்ளன. வட கொரிய அதிபரான பிறகு கிம் ஜாங் உன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். சீன அதிபருடன் கிம் ஜாங் உன் இரகசிய ஆலோசனையில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.