ஐ.ம.சு.கூ உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

கொழும்பு மாநகர சபைக்குத் தெரிவான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

by Bella Dalima 27-03-2018 | 8:04 PM
Colombo (News 1st)  கொழும்பு மாநகர சபைக்குத் தெரிவான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ​கொழும்பு மாநகர சபைக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு தெரிவானவர்களே இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் கலந்து கொண்டிருந்தார். இதன்போது, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, ஊடகவியலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.