உள்ளூராட்சிமன்றத் தலைவர்கள் நியமனத்தில் முறைகேடு 

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தலைவர்களை நியமிக்க பாரிய அளவில் இலஞ்சம் வழங்கப்பட்டதாக தகவல்

by Bella Dalima 27-03-2018 | 9:48 PM
Colombo (News 1st)  இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய, 340 உள்ளூராட்சி மன்றங்களில் தனிக்கட்சியொன்றுக்கு ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் மேயர் அல்லது தலைவரை வாக்கெடுப்பின் ஊடாகவே தெரிவு செய்ய வேண்டியிருந்தது. நேற்று (26) நடைபெற்ற அரணாயக்க பிரதேச சபைத் தலைவரைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பில், இலஞ்சம் பெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களித்ததாக பிரதேச சபை உறுப்பினர் இஷாரா மதுஷானி இன்று ஒப்புக்கொண்டார். இதேவேளை, நீர்கொழும்பு நகர சபைக்கான ஆட்சியமைக்கப்பட்ட போது, தமக்கு இலஞ்சம் வழங்க முயற்சித்ததாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீர்கொழும்பு தொகுதி அமைப்பாளர் மற்றும் நகர சபை உறுப்பினர் W.D.லலித் M. சில்வா குறிப்பிட்டார். கொட்டிகாவத்தை - முல்லேரியா பிரதேச சபைக்காக தமக்கு இலஞ்சம் வழங்க முயற்சித்ததாக, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் பீ.ருவன் கெலும் பெரேராவும் குறிப்பிட்டார்.  

ஏனைய செய்திகள்