உதயங்க வீரதுங்க கைது

உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி

by Staff Writer 27-03-2018 | 12:19 PM
COLOMBO (News 1st) - ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொலிஸ் நிதிக்குற்றவியல் விசாரணைப் பிரிவின் பிரதானி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி வைத்தியலங்காரவை மேற்கோள் காட்டி டெய்லி நியூஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள உதயங்க வீரதுங்கவை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக, பொலிஸ் நிதிக்குற்றவியல் விசாரணைப் பிரிவு, டுபாய் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரவி வைத்தியலங்கார தெரிவித்துள்ளார். டுபாய் அதிகாரிகளினால் நேற்று காலை உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். உதயங்க வீரதுங்க ஏற்கனவே டுபாய் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை விமானப்படைக்கு யுக்ரேய்னில் இருந்து மிக் 27 ரக 27 விமானங்களை கொள்வனவு செய்யும் போது முறையற்ற விதத்தில் பணம் சேகரித்தமை உதயங்க வீரதுங்க மீது சுமத்தப்பட்ட பிரதான குற்றச்சாட்டு ஆகும். இந்த குற்றச்சாட்டின் கீழ் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட உதயங்க வீரதுங்கவை கைது செய்யுமாறு சர்வதேச பொலிஸாருக்கு அறிவிக்கப்படடமை குறிப்பிடத்தக்கது.  

ஏனைய செய்திகள்