Formula One முதல் கட்டத்தில் ஜேர்மனி வெற்றி

Formula One முதல் கட்டத்தில் ஜேர்மனியின் செபஸ்தியன் வெற்றி

by Staff Writer 26-03-2018 | 4:37 PM
COLOMBO (News 1st) - Formula One காரோட்டத்தின் முதல் கட்டத்தில் ஜேர்மனியின் செபஸ்தியன் வெட்டெல் வெற்றியீட்டினார். இதன் மூலம் இவ்வருட Formula One காரோட்டத்தின் முதல்கட்டத்தில் வெற்றியீட்டிய வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார். வியப்பையும் அதிர்ச்சியையும் அள்ளித்தருகின்ற Formula One காரோட்டத்தின் முதலாவது க்றோன்ப்றி மெல்பர்னின் விக்டோரியா ஓடுபாதையில் நடத்தப்பட்டது. 68 வருட வரலாற்றைக் கொண்ட Formula One கார்பந்தயமானது மொத்தமாக 20 கட்டங்களைக் கொண்டதாக திகழ்கின்றது. கார்பந்தயங்களில் தனிச்சிறப்பு பெற்றதாக திகழும் Formula One பந்தயத்தில் நட்சத்திர வீரர்கள் பலர் வருடாந்தம் பங்கேற்கின்றனர். முதல் கட்டத்தில் வெற்றிக்காக வீரர்கள் 58 வளையங்களை கடக்க வேண்டியிருந்தது. பந்தயத்தில் திறமையாக செயற்பட்ட ஜேர்மனியின் செபஸ்தியன் வெட்டெல் முதலிடத்தைப் பிடித்தார். வெற்றிக்காக அவர் 01 மணித்தியாலம் 29 நிமிடங்கள் மற்றும் 33 செக்கன்களை எடுத்துக் கொண்டார். செபஸ்தியன் வெட்டெலை விட 5 செக்கன்கள் பின்தங்கிய நட்சத்திர வீரரான பிரித்தானியாவின் லூவிஸ் ஹமில்ட்டன் இரண்டாமிடத்தை அடைந்தார். பின்லாந்தின் கிமி ரெய்கொனன் மூன்றாமிடத்துக்கு தகுதியானார்.