முகத்துவாரத்தில் பெண்ணொருவர் அடித்துக் கொலை

முகத்துவாரத்தில் பெண்ணொருவர் அடித்துக் கொலை

by Staff Writer 26-03-2018 | 4:05 PM
COLOMBO (News 1st) - கொழும்பு முகத்துவாரம் பகுதியில் பெண்ணொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். 56 வயதான பெண்ணொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர. சகோதரிகள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, தங்கையினால் சகோதரி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த பெண்ணின் மகள், பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார். இதற்கமைய சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த பெண்ணின் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.