நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றநிகழ்ச்சிநிரலில்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டது

by Staff Writer 26-03-2018 | 6:27 PM
COLOMBO (News 1st) - பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, இன்று உத்தியோகபூர்வமாக பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 5 தினங்களுக்குள் நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படும் என பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல கூறியுள்ளார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பங்கேற்புடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்களால் கடந்த 21 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. 14 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 55 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். எனினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அதில் கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடததக்கது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 4 ஆம் திகதி காலை முதல் நடைபெறும விவாதங்களின் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும் என எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.