சாதாரணதர பரீட்சை:969பேரின் பெறுபேறுகள் இரத்து

சாதாரணதரப் பரீட்சை விண்ணப்பதாரிகள் 969 பேரின் பெறுபேறுகளை இரத்து செய்ய தீர்மானம்

by Staff Writer 26-03-2018 | 2:40 AM
COLOMBO (News 1st) - 2017 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த 969 பேரின் பெறுபேறுகளை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பரீட்சையின் விதிமுறைகளை மீறியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் அண்மையில் இடம்பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பரீட்சை மோசடிகள் தொடர்பில் 2,804 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் அவற்றில் 2,798 முறைப்பாடுகள் விண்ணப்பதாரிகள் சம்பந்தப்பட்டவை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில இடம்பெற்ற முதற்கட்ட விசாரணைகளில் 1,829 விடுதலையாகியுள்ளதாகவும் ஏனைய 969 பேரின் பெறுபேறுகளை நிராகரிப்பதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை கல்விப் பொதுத்தாராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளை 28 ஆம் திகதி வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்